சிரிய நாட்டு அகதிகள் 7 பேர் வாழைப்பழம் சாப்பிட்டு அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டது தொடர்பில் துருக்கியிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரிய நாட்டு அகதிகள் 7 பேர் வாழைப்பழம் சாப்பிட்டு அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டதால் துருக்கியிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். மேலும் துருக்கியை சேர்ந்த ஆண் ஒருவர் 17 வயது சிரிய மாணவியை “நீங்கள் கிலோ கணக்கில் வாழைப்பழம் வாங்கி சாப்பிடுகிறீர்கள் வசதியாக உள்ளீர்கள். என்னால் வாழைப்பழம் வாங்கி சாப்பிட முடியவில்லை” என்று திட்டியுள்ளார்.
https://twitter.com/i/status/1452642944528289807
அதேபோல் சிரிய நாட்டு அகதிகள் துருக்கியில் வசதியாக வாழ்ந்து வருவதாக இன்னொரு துருக்கியரும் குற்றம்சாட்டியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அந்த 17 வயது சிறுமி தங்களுக்கு வேறு புகலிடம் இல்லை என்று கூறியதையும் அவர்கள் காது கொடுத்து கேட்கவில்லை. இந்த வீடியோ இஸ்தான்புல் நகரில் கடந்த 17-ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே துருக்கிய அரசு அந்நாட்டு மக்களின் குடியிருப்பு எதிர்ப்பு மனப்போக்கை கட்டுப்படுத்த முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.