Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கேப்டன் பதவிக்கு இவர் தகுதியானவராக இருப்பார் ….! முன்னாள் வீரர் வெங்சர்க்கார் கருத்து …..!!!

இந்திய டி 20 அணியின் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா தகுதியானவராக இருப்பார் என முன்னாள் வீரர் வெங்சர்க்கார் கூறியுள்ளார் .

இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டியிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி பணிச்சுமை காரணமாக டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதனால் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது .இந்நிலையில் முன்னாள் வீரர் வெங்சர்க்கார்  விராட் கோலியின் பதவி விலகல் குறித்து கூறும்போது ,” அணியில் ரோகித் சர்மா கேப்டன் பதவிக்கு தகுதியானவராக இருப்பார். ஏனெனில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் .கடந்த 2010-ஆம் ஆண்டு இவரது தலைமையில் இந்திய அணி ஆசிய கோப்பை வென்றது.

மேலும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் . விராட் கோலியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக முடிவு நான் எதிர்பார்ப்பது தான் .கடந்த 8 ஆண்டுகளாக இந்திய அணியை நம்பர் ஒன் அணியாக வழிநடத்தி அவர் ஒவ்வொரு முறை பேட்டிங்  செய்யும் போது அவருக்கு மிகப்பெரிய அளவில் நெருக்கடி உண்டாகிறது .தற்போது அவர் சரியான நேரத்தில் முடிவெடுத்துள்ளார் .மேலும் டி 20 உலகக்கோப்பையை வென்று கொடுத்து கேப்டன் பதவியிலிருந்து விலகுவார் என நம்புகிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |