வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான கீரன் பொல்லார்டு, டி20 கிரிக்கெட் 11 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு செயல்பட்டு வருகிறார் .இதில் நேற்று நடைபெற்ற செயிண்ட் லூசியா கிங்ஸஅணிக்கான ஆட்டத்தில் 4-வது வீரராக களமிறங்கிய பொல்லார்டு 41 ரன்கள் குவித்தார் .
இதன் மூலம் டி20 போட்டியில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 14,308 ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளார்.