டி20 கிரிக்கெட்டில் டெல்லி அணி வீரர் அஷ்வின் 250 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனையை படைத்துள்ளார்.
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 36- வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்தது. இதன் பிறகு களமிறங்கிய ராஜஸ்தான் அணி 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது .ஆனால் இறுதியாக 6 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது .
The #VaathiRaid has been on in T20s since 2007 🔥#YehHaiNayiDilli #IPL2021 #DCvRR @ashwinravi99 pic.twitter.com/dVCDhQ4F7y
— Delhi Capitals (@DelhiCapitals) September 25, 2021
இதனால் டெல்லி அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இப்போட்டியில் 5-வது ஓவரை வீசிய தமிழக வீரர் அஷ்வின் ,ராஜஸ்தான் அணியின் டேவிட் மில்லர் விக்கெட்டை கைப்பற்றினார் .இதன் மூலம் டி 20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்கள் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.