டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது .இதன் பிறகு உலகக் கோப்பை டி20 தொடர் துபாய் , ஓமன் நாடுகளில் வருகிறஅக்டோபர் -நவம்பர் மாதங்களில் நடைபெறுகின்றது .இந்த தொடருக்கான சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று போட்டியில் விளையாட உள்ள அணிகளில் பட்டியலை ஐசிசி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதில் சூப்பர் 12 சுற்று , குரூப்-1 குரூப்-2 என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது .
Plenty of news from @Blackcaps today, starting with their squad for the @T20WorldCup and #INDvNZ T20Is. #T20WorldCup 🧵 pic.twitter.com/ruJ74um0Hg
— ICC (@ICC) August 9, 2021
இதில் குரூப் 1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ,தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ‘குரூப் A’ தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியும் , ‘குரூப் B ‘ தகுதி சுற்றின் ரன்னரும் விளையாட உள்ளது .இதையடுத்து ‘குரூப் 2’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளது. இதில் ‘குரூப் B’ தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியும் , ‘குரூப் A ‘ தகுதி சுற்றில் ரன்னரும் விளையாட உள்ளது . இந்த நிலையில் உலக கோப்பை டி 20 போட்டிக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி :
கேன் வில்லியம்சன், டாஸ் ஆஸ்லே, ட்ரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், டேவான் கான்வே, லாக்கி பெர்கியூசன், மார்டின் குப்தில், ஜேமிசன், டேரில் மிட்சல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்சல் சாண்ட்னர், டிம் செஃப்ரெட், இஷ் சோதி, டிம் சவுத்தி,ஆடம் மில்னே.