இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக கடந்த 2014-ம் ஆண்டு ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். இதன்பிறகு 2017-ஆம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அப்போது அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே பதவியிலிருந்து விலகினார் .அதன்பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி செயல்பட்டு வந்தார். இவர் பயிற்சியாளராக இருந்த 5 வருடங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது .மேலும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது .இந்நிலையில் டி20 உலக கோப்பையில் தொடருக்குப் பிறகு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக இருப்பதாக ரவிசாஸ்திரி கூறியுள்ளார் இது குறித்து அவர் கூறும்போது, “உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் விலக வேண்டும் என நினைக்கிறேன். நான் நினைத்து அனைத்தையும் சாதித்து விட்டேன் .கடந்த ஐந்து வருடங்களில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நம்பர்-1 அணி , ஆஸ்திரேலியாவில் 2 முறை டெஸ்ட் தொடரில் வெற்றி மற்றும் இங்கிலாந்தில் பெற்ற வெற்றி என வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அனைத்து நாடுகளையும் அவர்களுடைய சொந்த மண்ணில் தோற்கடித்தேன்.
டி20 உலககோப்பையையும் வெற்றி பெற்றால் சிறப்புதான் . மேலும் பேசிய அவர்,” இந்திய அணியில் நான் சாதிக்க நினைத்ததை விட கூடுதலாக சாதித்து விட்டேன். இது முடிவடைகிறது என்பதில் எனக்கு வருத்தம் தான். மேலும் அணியில் அற்புதமான வீரர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன் .அதோடு ஓய்வறையில் அருமையான நேரங்களை கழித்தோம் .நாங்கள் வெளிப்படுத்திய தரமும் போட்டி முடிவுகளும் அற்புதமான பயணமாக அமைந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.