டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் ‘ஏ ‘ பிரிவில் உள்ள இலங்கை – அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் 8 நாடுகள் பங்கேற்றுள்ள முதல் சுற்று ஆட்டத்தில் இதுவரை 6 போட்டிகள் முடிந்துள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள இலங்கை ,அயர்லாந்து ஆகிய அணிகள் ஒரு வெற்றியுடன் , 2 புள்ளிகள் பெற்றுள்ளது .அதேபோல் ‘பி ‘பிரிவில் உள்ள ஸ்காட்லாந்து அணி 4 புள்ளியும் ,வங்காளதேசம் மற்றும் ஓமன் அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன.இதனிடையே லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும்முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றான ‘சூப்பர் 12 ‘ சுற்றுக்கு தகுதி பெறும். இதில் 4-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன .
இதில் இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில்’ ஏ ‘பிரிவில் உள்ள நமீபியா- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதையடுத்து இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள இலங்கை – அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இரு அணிகளுமே இரண்டாவது வெற்றி பெற்று ‘சூப்பர் 12 ‘சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்புடன் களமிறங்கும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதற்கு முன் நடந்த தொடக்க ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தியது .அதேபோல் தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.