Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup : நெதர்லாந்தை வீழ்த்திய நமீபியா …! 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியா அணி அபார வெற்றி பெற்றது.

7-வது டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து- நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது .இதில் அதிரடியாக விளையாடிய  மேக்ஸ் ஓடவுட் 70 ரன்கள் குவித்தார். இதன்பிறகு 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா அணி களமிறங்கியது .

ஆனால் தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகள் விழுந்து தடுமாறியது .இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் எரஸ்மஸ் – டேவிட் வைஸ் ஜோடி அதிரடி ஆட்டத்தை  வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியாக 19 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்து நமீபியா அணி வெற்றி பெற்றது. இதில் தோல்வியடைந்த நெதர்லாந்து அணி டி20 உலகக் கோப்பை        ‘சூப்பர் 12’ சுற்றுக்கான வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

Categories

Tech |