7-வது டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து ,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட தரவரிசையில் ‘டாப் 8’ இடங்களை பிடித்துள்ள அணிகள் நேரடியாக ‘சூப்பர் 12 ‘ஆட்டத்தில் களம் இறங்குகின்றன .இதனால் ‘சூப்பர் 12’ ஆட்டத்தில் விளையாட உள்ள அணிகள் தங்களைத் தயார் படுத்திக் கொள்வதற்காக பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர் .அதன்படி இன்று நடைபெறும் இரண்டாவது மற்றும் கடைசி பயிற்சி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.இதில் இங்கிலாந்து அணியுடனான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இப்போட்டியில் தொடக்க வீரர்களாக கே எல் ராகுல் ஜோடி களமிறங்கி அதிரடி காட்டினார்.
அதேபோல் பந்து வீச்சிலும் முகமது ஷமி ,பும்ரா ,ராகுல் சாகர் ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றினர் .இதனிடையே கடந்த ஆட்டத்தில் களம் இறங்காத ரோகித் சர்மா ,ஜடேஜா ,ஷர்துல் தாகூர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இன்று நடைபெறும் போட்டியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .அதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது. எனவே இரு அணியும் சம பலத்துடன் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர் பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு துபாயில் தொடங்குகிறது. இப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.