டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் ‘சூப்பர் 12’ போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று முதல் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளது. இதில் இன்று நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- தென்னாபிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது .இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது .இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன்னில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 40 ரன்கள் குவித்தார் .இதன்பிறகு 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.
இதில் தொடக்கத்திலே ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் சொற்ப ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். இதன்பிறகு ஸ்டீவ் ஸ்மித் – மேக்ஸ்வெல் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .இதில் மேக்ஸ்வெல் 18 ரன்னில் வெளியேற அடுத்ததாக ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்னில் வெளியேறினார். இறுதியாக கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது இறுதியில்அதிரடி காட்டிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார் .இறுதியாக 19.4 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா வீழ்த்தி போராடி வெற்றி பெற்றது.