T.C.L நிறுவனத்தின் முதல் 4K A.I ஆண்ட்ராய்டு 9 TV இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
T.C.L நிறுவனம் இந்தியாவின் முதல் 4K A.I ஆண்ட்ராய்டு 9 டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய 55-இன்ச் P8E டி.வி.யில் ஹேன்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் சர்ச் தொழில்நுட்பத்துடன் கூடிய பெசல் லெஸ் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடைய விற்பனை அமேசான் இணையத்தில் ஏற்கனவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. T .C .L . P8E 55 இன்ச் டி.வி_யை குறிப்பிட்ட எல்லையில் இருந்து வாய்ஸ் கமெண்ட் மூலம் ஆன் ஆப் செய்யும் A.I தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் TV_யில் உள்ள பிரைட்னஸ், காண்டிராஸ்ட் மற்றும் சாட்யூரேஷன் சரி செய்யமுடியும். மேலும் TV சத்தம் எவ்வித தடையும் இன்றி மிக தெளிவாக துல்லியமாக கேட்க முடியும்.
இந்தியாவில் ஆண்ட்ராய்டு பை 9 இயங்குதளத்தை கொண்ட முதல் ஸ்மார்ட் TV_யாக பார்க்கப்படுகின்றது. மேலும் இதில் யூடியூப் மற்றும் கூகுள் பிளே மூலமாக வீடியோ மற்றும் அனைத்து இணைய சேவைகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி இத்துடன் வழங்கப்பட்டுள்ளது. HDMI 2.0, USB . 2.0, WIFI 2.4 ஜி மற்றும் ப்ளூடூத் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது . இதன் விலை சுமார் ரூ. 40,990 என நிர்ணயம் செய்துள்ளனர் .