தமிழ் திரை உலகில் வசனம், இசை, நடிப்பு, இயக்கம் என பன்முக திறமை கொண்டவர் டி ராஜேந்திரன். இவர் கடந்த மார்ச் 18ஆம் தேதி குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே மாற்றுத்திறனாளி ஒருவர் சாலையைக் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாற்றுத்திறனாளியான முனுசாமி மீது கார் மோதியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் இருந்து முனுசாமியை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முனுசாமி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த தி நகர் போலீசார் டி ராஜேந்திரனின் கார் ஓட்டுனரான செல்வத்தை கைது செய்துள்ளனர்.