இந்திய அணியின் முன்னாள் வீரரும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான யுவராஜ் சிங் அபுதாபில் நடைபெறவுள்ள டி10 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக கிரிக்கெட் வரலாறானது டெஸ்ட் வடிவில் தொடங்கி காலப்போக்கில் ஒருநாள், டி20 என்பதையெல்லாம் தாண்டி தற்போது டி10 தொடராக உருமாறியுள்ளது. அந்த வகையில் டி10 தொடர்கள் 2017ஆம் ஆண்டு முதல் அபுதாபியில் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டு நடைபெறவுள்ள டி10 தொடரில் பல முன்னணி அணிகளின் நட்சத்திர வீரர்கள் களமிறங்கவுள்ளனர். அந்த வரிசையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் இத்தொடரில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே யுவராஜ் சிங் சர்வதேச டி20 அரங்கில் யாரும் நெருங்க முடியாத ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை பறக்கவீட்டவர். அந்த வரிசையில் தற்போது டி10 தொடரில் பங்கேற்றால் பந்து வீச்சாளர்களின் நிலை அதோ கதிதான்.ஆனால் பிசிசிஐயின் விதி படி ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் மட்டுமே வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க முடியும் என்பதால் யுவராஜ் சிங் இந்தாண்டு டி10 தொடரில் பங்கேற்பார் என்பதில் சந்தேகமில்லை.
ஏனேனில் இந்தாண்டு ஜூலை மாதம் யுவராஜ் சிங் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், பாகிஸ்தானின் ஷாகித் அஃப்ரிடி, முகமது அமிர், இலங்கையிலிருந்து லசித் மலிங்கா, திசாரா பெரேரா, உலகக்கோபை சாம்பியனான இங்கிலாந்திலிருந்து ஈயன் மோர்கன், மோஹின் அலி, வெஸ்ட் இண்டீஸிலிருந்து பொல்லார்ட், சமி,லீவிஸ், ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின் போன்ற பல நட்சத்திரப் பட்டாளங்கள் இத்தொடரில் பங்கேற்பதால் ரசிகர்களின் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.