Categories
கிரிக்கெட் விளையாட்டு

T10 LEAGUE: மழையால் பாதிக்கப்பட்ட கிளாடியேட்டர்ஸின் வெற்றி!

டி10 லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்ர்ஸ், டீம் அபுதாபி மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் லீக்கின் 18ஆவது லீக் ஆட்டத்தில் ஷேன் வாட்சன் தலைமையிலான டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி, மோயீன் அலி தலைமையிலான டீம் அபுதாபி அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற கிளாடியேட்டர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய டீம் அபுதாபி அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ, லுக் ரைட் இணை அதிடியான தொடக்கத்தை தந்தனர். அதிரடியாக விளையாடிய ஃபெர்னாண்டோ 17 ரன்களிலும், லுக் ரைட் 23 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து கிரிகோரி, மேட்சன் இணை அணியின் ஸ்கோர் கணக்கை உயத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் மூலம் டீம் அபுதாபி அணி 10 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை எடுத்தது. கிளாடியேட்டர்ஸ் அணி தரப்பில் ஃபவத் அஹ்மத் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணிக்கு முகமது ஷஷாத் அதிரடியான தொடக்கத்தைத் தந்தார்.

கிளாடியேட்டர்ஸ் அணி 2.2 ஓவர்களில் 25 ரன்களை எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே தடைபட்டது. தொடர்ந்து மழை நிற்காத காரணத்தால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் டெக்கான் அணியின் முன்றாவது வெற்றிக் கனவும் கலைந்தது.

Categories

Tech |