பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலே பின்னாளில் வரும் போட்டிகளில் இந்தியாவுக்கு நெருக்கடி இருக்காது என கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றுகள் விருவருப்பாக நடைபெற்று வருகிறது. அதில் குரூப் டி யில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியுடன் தோல்வியுற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணிக்கு மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணி தோற்க வேண்டும் என்பதே ஆகும்.
ஏனென்றால், நியூசிலாந்து அணி தோற்றால் அடுத்து அக்டோபர் 31 அன்று நடைபெறக்கூடிய இந்தியா – நியூசிலாந்து போட்டி ஏறக்குறைய ஒரு நாக்கவுட் போட்டி போன்றதாக மாறிவிடும்.ஏனெனில் மீதமிருக்கும் நமிபியா, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து ஆகிய அசோசியேட் அணிகளை அனைவருமே வெல்வார்கள்.
இந்தியா – நியூசிலாந்திடம் தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். அதற்கு நேற்றைய போட்டியில் பாக்கிஸ்தான் வெற்றி பெறுவதுதான் இந்தியாவுக்கு நல்லது. ஒருவேளை நியூசிலாந்து வெற்றி பெற்று விட்டால் இந்தியா குவாலிபையராக அதிக ரன் விகிதம் தேவையானதாக இருக்கும் என்பது போன்ற சுழல் இருந்தது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இந்திய ரசிகர்களின் கனவுகளுக்கு தீனி போட்டது.