சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் கடந்த வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளார் .
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது .இதில் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி டி-20 தொடரை கைப்பற்றியது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்கள் குவித்தார் .இது ரோகித் சர்மாவுக்கு 30-வது அரைசதம் ஆகும் .இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் கடந்த விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார் .
அதோடு டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் எடுத்த பட்டியலில் 30 அரை சதத்துடன் ரோகித்சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளார் . இதையடுத்து விராட் கோலி 29 அரை சதத்துடன் 2-வது இடத்தில் உள்ளார். அடுத்ததாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 25 அரை சதத்துடன் 3-வது இடத்தில் உள்ளார். அது மட்டுமில்லாது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 சிக்சர்கள் விளாசிய 2-வது வீரர் என்ற புதிய சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார் .