Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் மலிங்காவின் சாதனையை முறியடித்தார் ரஷித் கான்….!!!

டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் அதிவேகமாக 100 விக்கெட் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.

டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது. இதில் பாகிஸ்தான் அணியின் முகமது ஹபீஸ் விக்கெட்டை ரஷித் கான் கைப்பற்றினார் .இது அவருக்கு 100-வது விக்கெட் ஆகும்.

இதுவரை 53  20ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ள  ரஷித் கான் அதிவேகமாக 100 விக்கெட் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இலங்கை அணியில் லலித் மலிங்கா 76 போட்டிகளில் 100 விக்கெட் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. தற்போது இவரது சாதனையை ரஷித் கான் முறியடித்துள்ளார்.

Categories

Tech |