இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில்விளையாடுகிறது .இதனிடையே இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது
இப்போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.மேலும் நேற்றைய போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக விக்கெட் (67) கைப்பற்றியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதைதொடர்ந்து 66 விக்கெட்டுடன் பும்ரா இவருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.