டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார் .
7-வது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா இன்று நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. இதனால் இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது .அதுமட்டுமின்றி போட்டி குறித்து முன்னாள் வீரர்கள், பிரபலங்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் இப்போட்டி குறித்து கூறுகையில், “இப்போட்டி இரு அணி வீரர்களுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் யார் அழுத்தத்தை நன்றாக கையாள்வார்கள் என்பதை பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.
அதே சமயம் பாகிஸ்தான் அணி ஆபத்தானது என்று நான் கூறுவேன் .ஏனெனில் குறிப்பிட்ட நாளில் எந்த அணியையும் வீழ்த்தும் திறமை பாகிஸ்தான் அணியிடம் உள்ளது அதோடு கடந்த இரண்டு வருடங்களாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியது இல்லை .இதனிடையே இரு அணிகளும் வியூகங்களை வகுப்பது சிக்கலை சந்திக்கும். இந்திய அணியும் திறமையான வீரர்களை கொண்டுள்ளது .அதேசமயம் அழுத்தத்தின் கீழ் அவர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதே முக்கியமாகும் .ஒருவேளை இந்திய அணியால் இந்த அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் போனால் அது பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக முடியும் ” இவ்வாறு அவர் கூறியுள்ளார்