டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் 7-வது இடத்தில் உள்ளார்.
டி 20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதின .இதில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 34 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார் .அப்போது அவர் 32-வது ரன்னை தொட்ட போது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 2500 ரன்கள் எடுத்தார் . இதன்மூலம் 2500 ரன்கள் கடந்த விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். இதில் விராட் கோலி 68 இன்னிங்சில் 2,500 ரன்கள் எடுத்தார். ஆனால் நேற்றைய போட்டியில் பாபர் அசாம் 62 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டி அதிவேக அதிக ரன்கள் குவித்துள்ளார் .
அதோடு டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் அவர் 7-வது இடத்தில் உள்ளார். இதையடுத்து விராட் கோலி 3,227 ரன்னுடன் முதலிடத்தில் உள்ளார். அதோடு நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் பாபர் அசாம் 300-க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார் .இதன்மூலம் ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். நடப்பு டி20 தொடரில் 6 போட்டியில் விளையாடியுள்ள பாபர் அசாம் 4 அரைசதத்துடன் 303 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன்னதாக 2014 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் விராட்கோலி 319 ரன்னும், 2016ஆம் ஆண்டு நடந்த தொடரில் 317 ரன்னும் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.