Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக் கோப்பை : பாகிஸ்தான் அணி அறிவிப்பு ….! முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை ….!!!

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெற இருந்த  டி20 உலக கோப்பை போட்டி கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான அட்டவணையை சமீபத்தில்  ஐசிசி வெளியிட்டது .இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான பாபர் அசாம் தலைமையிலான 15 பேர் கொண்ட  வீரர்களின் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

 

இதே அணிதான் நியூசிலாந்து ,இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரிலும் விளையாடும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது .இதில் முன்னணி வீரர்களான சோயிப் மாலிக் மற்றும் சர்பராஸ் அகமது  ஆகியோர் இடம்பெறவில்லை.

பாகிஸ்தான் அணி : பாபர் அசாம் (கேப்டன் ),ஷதாப் கான் , ஆசிஃப் அலி, ஆஸம் கான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, இமாத் வாசிம், குஷ்டில் ஷா, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அஃப்ரிடி, சோகைப் மக்சூத்.

Categories

Tech |