Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை : இங்கிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் …. 4வது பந்துவீச்சாளராக இடம்பிடித்தார் ரபாடா….!!!

டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று நடந்த இங்கிலாந்து அணிகெதிரான ஆட்டத்தில்  10 ரன்கள்  வித்தியாசத்தில்  தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது .

டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று இரவு நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் மோதின.இதில் முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது .இப்போட்டியில் கடைசி ஓவரை வீசிய தென்ஆப்பிரிக்க அணியில் ரபடா முதல் பந்தில் வோக்ஸ், 2-வது பந்தில் மார்கன், 3-வது பந்தில் ஜோர்டான் ஆகியோரின் அடுத்தடுத்து வெளியேற்றினார்.

அதோடு டி20 உலக கோப்பை தொடரில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய 4-வது பவுலர் ரபடா  என்பது குறிப்பிடத்தக்கது .இதற்கு முன்பாக 2007ஆம் ஆண்டு நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் பிரெட் லீ, நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் அயர்லாந்து அணியில்  கர்ட்டிஸ் கேம்பர்,இலங்கை வீரர் ஹசரங்கா ஆகியோர் ஹாட்ரிக்  விக்கெட் கைப்பற்றி உள்ளனர் .

Categories

Tech |