Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை :நியூசிலாந்து அணிக்கு வந்த சிக்கல் ….! காயம் காரணமாக முன்னனி வீரர் விலகல் …..!!!

டி 20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி வீரர்  டேவன் கான்வே காயம் காரணமாக நாளை நடைபெறும் இறுதிப்போட்டியிருந்து விலகியுள்ளார் .

டி 20 உலகக்கோப்பை போட்டியில் அபுதாபியில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகள் மோதின .அப்போது  லிவிங்ஸ்டோன் வீசிய பந்தை எதிர்கொண்ட நியூசிலாந்தின் டேவன் கான்வே சில அடி இறங்கி வந்து அடிக்க முயன்றார் .ஆனால் விக்கெட் கீப்பர் பட்லரால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ஏமாற்றமடைந்த அவர் தனது பேட்டில் கையால் ஓங்கி குத்தினார் .இதில் காயமடைந்த அவருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டது .

அப்போது கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது இதனிடையே நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த நிலையில் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக டேவன் கான்வே இறுதி போட்டியில் இருந்து விலகியுள்ளார் .அதோடு இந்திய அணிக்கு எதிரான தொடரில் இருந்தும்  விலகியுள்ளார் .இந்நிலையில்  டேவன் கான்வே நியூசிலாந்து அணியில் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Categories

Tech |