டி20 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசு தொகையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 17 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் டி20 உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூபாய் 12.02 கோடி(அதாவது 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. அதே சமயம் இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு ரூபாய் 6.01 கோடி ரூபாயும், அரையிறுதி போட்டிகளில் தோல்வியடையும் அணிகளுக்கு ரூபாய் 3 கோடி (தலா 4 லட்சம் அமெரிக்க டாலர்கள்) பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
அதேசமயம் இரண்டாவது சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலரும், தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 70 ஆயிரம் அமெரிக்க டாலரும் வழங்கப்படுகிறது. இதில் முதல் சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படுகிறது. மொத்தமாக 5.6 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 37.5 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக ஐசிசி ஒதுக்கீடு செய்துள்ளது.