ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் .
7-வது டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா-ஸ்காட்லாந்து அணிகள் மோதின.இதில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது .இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் டி20 உலக கோப்பை போட்டியில் முக்கிய சாதனை படைத்துள்ளார்.
இதுவரை டி 20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அதிவேகமாக அரைசதம் கடந்து சாதனையாக இருந்தது .இதனிடையே அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல் இந்திய அணியில் அதிவேகமாக அரைசதத்தை கடந்த 2-வது வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் .இவர் நேற்று நடந்த ஆட்டத்தில் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.