இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி 20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு டி20 அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய இரு தினங்களில் நடக்கிறது. கடைசி டி-20 போட்டியில் இருந்து அனைத்துப் போட்டிகளும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி 20 தொடருக்கான 14 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த சில ஆண்டுகளாக அணியில் இடம்பெறாமல் இருக்கும் அதிரடி வீரர் பொல்லார்ட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் ஆண்ட்ரே ரசலும் இடம்பெற்றுள்ளார். அவர் காயம் அடைந்துள்ளதால் உடல் தகுதிக்கு பிறகு அணியில் இடம் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயிலுக்கு இடம் அளிக்கவில்லை.
அணி தேர்வு பற்றி இடைக்கால குழுத் தலைவர் ராபர்ட் ஹெய்ன்ஸ் கூறும்போது, டி20 உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு அணியை தேர்வு செய்துள்ளோம். டி20 போட்டியில் பொல்லார்டும் சுனில் நரேனும் சிறப்பாக ஆடுவார்கள். அதனால் அவர்களை அணியில் தேர்வு செய்துள்ளோம். இது சிறப்பான கலவை கொண்ட அணி என்று நினைக்கிறோம்” என்றார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் :
கார்லஸ் பிராத்வேய்ட் (C ), ஜான் கேம்பெல், எவின் லீவிஸ், ஹெட் மேயர், நிக்கோலஸ் பூரன், பொல்லார்ட், ரோவ்மன் பாவெல், கீமோ பால், சுனில் நரைன், காட்ரல், ஓசன் தாமஸ், அந்தோணி பிராம்பில், ஆண்ட்ரே ரஸெல், காரி பியர்ஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.