டி20 உலக கோப்பை தொடரில் பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான ஆட்டத்தில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது.
7-வது டி20 உலக கோப்பை தொடரில் முதல் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் ‘பி ‘பிரிவில் இன்று மாலை நடந்த ஆட்டத்தில் வங்காளதேசம் – பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது .அதிகபட்சமாக அணியின் கேப்டன் மஹ்முதுல்லா 50 ரன்னும் ,ஷாகிப் அல் ஹசன் 46 ரன்னும் ,லித்தன் தாஸ் 29 ரன்னும் குவித்தனர்.
இதன்பிறகு 182 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு பப்புவா நியூ கினியா அணி களமிறங்கியது. ஆனால் வங்காளதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது .இதில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 29 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது .இறுதியாக பப்புவா நியூ கினியா அணி 97 ரன்னில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக கிப்லின் டோரிகா 46 ரன்கள் குவித்தார் .இதனால் 84 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. இதில் ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.