அடுத்த ஆண்டு இந்தியாவிலும், 2022-ல் ஆஸ்திரேலியாவிலும் உலகக் கோப்பை டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்க உள்ளது. அது தொடர்பாக கேப்டன் கோலிக்கு கபில் தேவ் ஒரு டிப்ஸ் கொடுத்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யாவை ‘டி–20’ போட்டிகளில் நான்காவது வீரராக களமிறக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்திய அணி ‘ஆல்-–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 210 ரன்கள் குவித்தார். டி-20 தொடரில் மேன் ஆப் தி சீரிஸ் பட்டம் வென்றார்.
போட்டியின் ‘மிடில் ஓவர்களில்’ பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக் கூடிய இரண்டு அல்லது மூன்று வீரர்கள் அணிக்கு தேவை.இதற்கு ஹர்திக் பாண்ட்யா பொருத்தமாக இருப்பார். இவரை ‘டுவென்டி–20’ அணியில் சோதனை அடிப்படையில் நான்காவது இடத்தில் கேப்டன் கோஹ்லி களமிறக்கிப் பார்க்கலாம் என கூறியுள்ளார்.