டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வங்காளதேசம் – பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் முதல் சுற்று ஆட்டத்தில் பங்கேற்கும் 8 நாடுகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது இதில் ‘ஏ’ பிரிவில் இலங்கை , அயர்லாந்து, நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் , அடுத்ததாக ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஓமன் ,ஸ்காட்லாந்து மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன .இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும் .இதில் லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் நேற்று நடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு அணிகளும் ஒரு தோல்வியுடன் ,2புள்ளிகள் பெற்றுள்ளது.இதனிடையே இரண்டு தோல்வியை சந்தித்த நெதர்லாந்து அணி ‘சூப்பர் 12’ சுற்று வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் ‘பி’ பிரிவில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் வங்காளதேசம் – பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியிடம் 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த வங்காளதேச அணி, இரண்டாவது ஆட்டத்தில் ஓமனை வீழ்த்தி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இதனால் இன்றைய போட்டியில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி ‘சூப்பர் 12’ சுற்றுக்கு நுழையும் முனைப்புடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இதே பிரிவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள மற்றொரு போட்டியில் ஓமன் – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் ஸ்காட்லாந்து அணி 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இதையடுத்து ஓமன் அணி ஒரு வெற்றி ,ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் ஸ்காட்லாந்து அணி 3-வது வெற்றி பெற்று ‘சூப்பர் 12’ சுற்றுக்கும் முன்னேறும் ஆர்வத்தில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.