Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20Ranking : நம்பர் 1பேட்ஸ்மேன்….. பாபரை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ரிஸ்வான்..!!

டி20 தரவரிசையில் முகமது ரிஸ்வான் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அடிக்கடி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.. அதன்படி டி20 கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகமது ரிஸ்வான், அதே அணியை சேர்ந்த பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்திருக்கிறார். இதனால் 2ஆவது இடத்திற்க்கு பாபர் அசாம் தள்ளப்பட்டார். முகமது ரிஸ்வான் 815 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்ததன் மூலம் மிஸ்பா உல் ஹக் அசாம் மற்றும் பாபர் அசாமுக்கு அடுத்தபடியாக டி20 தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் 3ஆவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்..

கடந்த சில ஆண்டுகளாகவே முகமது ரிஸ்வான் தொடக்க வீரராக களம் இறங்கி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேபோல தற்போது நடைபெறும் ஆசிய கோப்பை தொடரிலும் அற்புதமாக ஆடி வருகிறார். அவர் இந்தியாவுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 43 ரன்களும், அதனைத் தொடர்ந்து ஹாங்காங் அணிக்கு எதிராக 78 ரன்களும், அதன் பிறகு சூப்பர் 4ல் இந்திய அணிக்கு எதிராக 71 ரன்கள் எடுத்தது மூலமாக டி20 தரவரிசை பட்டியல் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்..

இந்த ஆசிய கோப்பை தொடரில் நல்ல பார்மில் இருக்கும் இவர் 3 போட்டிகளில் 192 ரன்கள் குவித்து முன்னிலையில் உள்ளார். கடந்த 1,155 நாட்கள் (செப்டம்பர் 7 வரை)  தொடர்ந்து முதலிடத்தில் இருந்த பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி முதலிடம் வகிக்கிறார் முகமது ரிஸ்வான்.. இந்த டி20 தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இந்திய வீரர் சூர்யகுமார் குமார் யாதவ் மட்டுமே இருக்கிறார்.. சூரக்குமார் யாதவ் 4ஆவது இடத்தில் தற்போது இருக்கிறார்.

தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் 3ஆவது இடத்தில் உள்ளார். அதேபோல இந்திய அணியின் ரோகித் சர்மா 14 வது இடத்திலும், இஷான் கிஷன் 19 ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.. இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் விராட் கோலி முதல் 20 இடங்களில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |