Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup:பாகிஸ்தானை பந்தாடியது ஆஸ்திரேலியா ….! இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல் ….!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176  ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 39 ரன்களும், முகமது ரிஸ்வான் 67 ரன்களும் ,பகர் சமான் 55 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில்  மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட் கைப்பற்றினார் .இதன் பிறகு 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது .இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ஆரோன் பின்ஞ் டக் அவுட் ஆகி வெளியேறினார் .இதன் பிறகு  களமிறங்கிய மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னருடன்  ஜோடி  சேர்ந்தார் .இருவரும் அதிரடியாக விளையாடி   அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் மார்ஷ் 28 ரன்னில்  வெளியேற ,அடுத்து வந்த ஸ்மித் 5 ரன்னும் ,மேக்ஸ்வெல் 7 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் இழக்க மறுபுறம் நினைத்து ஆடிய டேவிட் வார்னர் 49 ரன்னில் ஆட்டம் இழந்தார் .இதனால் 96 ரன்னுக்குள் 5 விக்கெட் இழந்து ஆஸ்திரேலியா அணி தடுமாறியது. இதன் பிறகு களமிறங்கிய  மார்கஸ் ஸ்டோய்னிஸ் – மேத்யூ வேட் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.இதில்  ஸ்டோய்னிஸ் 40 ரன்னும், மேத்யூ வேட்  41 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதன்மூலம்  வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Categories

Tech |