Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர்…. யுவராஜ் சிங் சாதனையை காலி செய்த ரோஹித் சர்மா..!!

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

8ஆவது டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்தியநேரப்படி இன்று மதியம் 12: 30 மணிக்கு மேல் இப்போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி ரோஹித் சர்மா (53), விராட் கோலி (62*), சூர்யகுமார் யாதவ் (51*) அதிரடியால் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் தொடர்ச்சியாக 2ஆவது வெற்றியைப் பெற்றதன் மூலம், இந்தியா இப்போது 4 புள்ளிகளுடன் குரூப் 2 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா 39 பந்துகளில் (4 பவுண்டரி, 3 சிக்சர்) 53 ரன்கள் எடுத்தார். இதில் ரோஹித் சர்மா 3 ஆவது சிக்ஸரை விளாசியதன் மூலம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முறியடித்தார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அவர் தனது சிக்ஸர்களின் எண்ணிக்கையை 34 ஆக உயர்த்தினார். முந்தைய சாதனையை 33 சிக்ஸர்களுடன் வைத்திருந்த யுவராஜ் சிங்கை அவர் முந்தினார்.

ஒட்டுமொத்தமாக டி20 வரலாற்றில் கிறிஸ் கெய்ல் 63 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.

டி20 உலகக்கோப்பை போட்டியில் ஒரு இந்தியரால் அதிக சிக்ஸர்கள் :

ரோஹித் சர்மா – 34 சிக்ஸர்

யுவராஜ் சிங் – 33 சிக்ஸர்

விராட் கோலி – 24 சிக்ஸர்

டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் : 

கிறிஸ் கெய்ல் – 63 சிக்சர்

ரோஹித் சர்மா – 34 சிக்சர்

யுவராஜ் சிங் – 33 சிக்சர்

டேவிட் வார்னர் – 31 சிக்ஸர்

சேன் வாட்சன் – 31 சிக்ஸர்

ஏபிடி வில்லியர்ஸ் – 30 சிக்ஸர்

ஜாஸ் பட்லர் – 26 சிக்ஸர்

டுவைன் பிராவோ – 25 சிக்ஸர்

 

 

Categories

Tech |