Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அதிக ரன்கள்…! ஜெயவர்த்தனே சாதனை காலி…. மாஸ் காட்டும் கிங் கோலி.!!

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை (1,065) எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி நேற்று முறியடித்தார்.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய சூப்பர் 12 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி விராட் கோலி, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் குவித்தது.  பின்னர் ஆடிய வங்கதேச அணி லிட்டன் தாஸ் அதிரடியால் முதல் 7 ஓவரில் விக்கெட் இழக்காமல் 66 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது.

இதன்பின் போட்டி மழை நின்ற பின் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. மழைக்கு முன் அதிரடியாக ஆடிவந்த லிட்டன் தாஸ்  (27 பந்துகளில் 60 ரன்கள்) ரன் அவுட் ஆனதை தொடர்ந்து, வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக 16 ஓவர் முடிவில் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முன்னாள் கேப்டன் விராட் கோலி 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்து இருந்து வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல முதல் இரண்டு (பாகிஸ்தான், நெதர்லாந்து) போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த விராட் கோலி அதே அதிரடியை இந்த போட்டியிலும் தொடர்ந்தார். அவர் நெதர்லாந்து அணிக்கு எதிராக 62 ரன்கள் அடுத்ததன் மூலம் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்திருந்த வீரர்கள் பட்டியலில் இருந்த கிறிஸ் கெய்லை (965) பின்னுக்கு தள்ளி 2ஆவது இடத்திற்கு முன்னேறி இருந்தார்..

அதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 12 ரன்கள் எடுத்ததன் மூலம் டி20 உலக கோப்பையில் ஆயிரம் ரன்கள் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். அப்போது இலங்கை அணி  வீரர் மகிளா ஜெயவர்த்தனே 1,016 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவரவை முந்தி செல்ல 16 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஜெயவர்த்தனேவை  பின்னுக்கு தள்ளி தற்போது டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.. டி20 உலக கோப்பையில் மொத்தம் 23 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ள விராட் கோலி 1,065 ரன்கள் எடுத்துள்ளார். இரண்டாவது இடத்தில் 31 போட்டிகளில்  ஜெயவர்த்தனே 1,016 ரன்கள் எடுத்துள்ளார்..

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச பேட்டிங் சராசரி (88.75) என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார். மேலும், டி20 உலகக் கோப்பைகளில் அதிக அரைசதங்கள் (13) அடித்துள்ளார். போட்டி வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை (7) பெற்றுள்ளார் கோலி. அதுமட்டுமில்லாமல் 2022 டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவரராகவும் முதலிடத்தில் உள்ளார் கோலி.. அதாவது 3 சாதனைகளை கோலி படைத்துள்ளார்..

Categories

Tech |