7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
தொடக்க வீரராக ராகுல், ரோஹித் களமிறங்க ஷாஹீன் அப்ரிடி முதல் ஓவரை வீசினார். ரோஹித் சர்மா எதிர்கொண்ட முதல் பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 1 ரன்னுக்கு 1 விக்கெட் விழுந்த நிலையில் கேப்டன் கோலி களமிறங்கினார்.
அணியின் ஸ்கோர் 2.1 ஓவரில் 6 ரன்கள் இருக்கும் போது ஷாஹீன் அப்ரிடியின் அசுர பந்து வீச்சில் கே.எல் ராகுல் 3 ரன்னில் போல்ட் ஆகி வெளியேற கோலியுடன் சூரியகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். 6ஆவது ஓவரை வீசிய ஹசன் அலி வீசிய 4ஆவது பந்தில் அணியின் ஸ்கோர் 31ஆக இருந்த போது முஹம்மத் ரிஸ்வான்னிடம் கேட்ச் கொடுத்து சூரியகுமார் யாதவ் ஆட்டமிழந்தார்.
8 பந்துகளில் வெறும் 11ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணியின் தொடக்கம் தடுமாறி வரும் நிலையில் ரிஷப் பண்ட் இறங்கி அதிரடி காட்டினார். கோலி – ரிஷப் பண்ட் ஜோடி 50 ரன்னை கடந்த நிலையில் அணியின் ஸ்கோர் 12.2ஓவரில் 84 இருந்த போது பந்து வீசிய ஷதாப் கானிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 2சிக்ஸ், 2பவுண்டரியுடன் 30 பந்தில் 39ரன்கள் எடுத்தார்.