Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அனல்பறக்கும் கடைசி தகுதி சுற்றுப்போட்டிகள்….. “இன்று மல்லுகட்டும் 4 அணிகள்”….. சூப்பர் 12ல் யார்?

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இடம்பிடிக்க இன்று 4 அணிகள் மோதவுள்ளன..

ஐசிசி 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் கட்டமாக கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள தகுதி சுற்றில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, நமிபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றன. இதில் ஏ பிரிவில் உள்ள அணிகளுக்கிடையேயான தகுதி சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது.

அதில் இலங்கை அணி கடைசி 3ஆவது போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி 4 புள்ளிகள்  பெற்று சூப்பர் 12 சுற்றுக்குள்  நுழைந்துள்ளது. அதேபோல நமீபியா நேற்று நடந்த போட்டியில் யுஏஇ அணியுடன் தோல்வியடைந்ததால் நெதர்லாந்து அணி 4 புள்ளிகள் பெற்று 2ஆம் பிடித்து சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. குரூப் ஏ பிரிவில் 2ஆவது இடம் பிடிக்கும்  அணியும், குரூப் பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும்  இந்திய அணி இடம்பிடித்துள்ள குரூப் 2 பிரிவில் இடம்பிடிக்கும்.. அதன்படி தற்போது நெதர்லாந்து அணி குரூப் 2 பிரிவில் இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில் குரூப் பி பிரிவில் உள்ள 4 அணிகள் இன்று மோதுகிறது.. அதாவது இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது அதில் காலை 9:30 மணிக்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. அதன்பின் மதியம் 1:30 மணிக்கு ஸ்காட்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இதில் முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியுள்ளது. அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியுள்ளது.

 

எனவே எந்த அணியையும் குறைவாக மதிப்பிட முடியவில்லை.. ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணியை மட்டுமே பலம் என்று நினைத்து விட முடியாது. டி20 கிரிக்கெட்டில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.. கத்துக்குட்டியான ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகள் வெற்றிபெற்று சூப்பர் 12க்குள் நுழைந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

சூப்பர் 12 குரூப்-1 பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. நாளை முதல் சூப்பர் 12 போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளது..

ப்ளேயிங் XIகள் கணிக்கப்பட்டது ;

மேற்கிந்திய தீவுகள் : கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், எவின் லூயிஸ், நிக்கோலஸ் பூரன் (கே & வி.கீ ), ஷமர் ப்ரூக்ஸ், ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், அக்கேல் ஹோசைன், அல்ஸாரி ஜோசப், ஒடியன் ஸ்மித், ஓபேட் மெக்காய்

அயர்லாந்து : பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), லோர்கன் டக்கர் (வி.கீ ), ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அடேர், சிமி சிங், பாரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில்

ப்ளேயிங் XIகள் கணிக்கப்பட்டது :

ஜிம்பாப்வே : ரெஜிஸ் சகாப்வா (வி.கீ ), கிரெய்க் எர்வின் (கே), வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் நகரவா, பிளஸ்ஸிங் முசரபானி

ஸ்காட்லாந்து : ஜார்ஜ் முன்சி, மைக்கேல் ஜோன்ஸ், மேத்யூ கிராஸ் (விகீ), ரிச்சி பெரிங்டன் (கே), கலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், ஜோஷ் டேவி, சஃப்யான் ஷெரீப், பிராட் வீல்

 

Categories

Tech |