Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அரையிறுதியில் மழை வந்து போட்டி நின்றால் என்ன நடக்கும்?….. இறுதிப்போட்டிக்கு யார் போவார்கள்?

டி20 உலக கோப்பையில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் மழை பெய்து ஆட்டம் நிறுத்தப்பட்டால்  என்ன நடக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆஸ்திரேலியாவில் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் டாப் 2 இடங்களை பிடித்துள்ள  அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. அதன்படி குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து நாளை நவம்பர் 9ஆம் தேதி முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.. அதனைத் தொடர்ந்து நவம்பர் 10ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 2ஆவது அரையிறுதியில் மோதுகிறது..

இந்நிலையில் டி20 உலக கோப்பைக்கான நாக்கவுட் சுற்றுக்கான விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி மழை பெய்து ஆட்டம் நிறுத்தப்பட்டாலும், கைவிடப்பட்டாலும் என்ன நடக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி இரண்டிற்குமே ரிசர்வ் நாளை அறிவித்துள்ளது. நாளை நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் மழை வந்து ஆட்டம் பாதிக்கப்பட்டால், போட்டி நிறுத்தப்பட்டு பின் ரிசர்வ் நாளாக அடுத்த நவம்பர் 10ஆம் தேதி எங்கு நிறுத்தப்பட்டதோ, அங்கிருந்து போட்டி தொடங்கும். இதே போல 2ஆவது அரையிறுதி போட்டியிலும் மழை வந்தால் போட்டி நிறுத்தப்பட்டு பின் நவம்பர் 11ஆம் தேதி ஆட்டம் நடைபெறும்.

ஒருவேளை மழை காரணமாக இரண்டாவது நாளிலும் ஆட்டத்தை நடத்த முடியாவிட்டால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதன்படி பார்த்தால் குரூப் 2 பிரிவில் 8 புள்ளிகள் பெற்று  இந்தியா முதலிடத்திலும், குரூப்-1 பிரிவில் 7 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி முதல் இடத்திலும் புள்ளி பட்டியலில் இருக்கிறது. எனவே அந்த இரு அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு செல்லும்.

ஐசிசி விதியின்படி குரூப்சுற்று போட்டியின் முடிவுக்காக 2 அணிகளுமே குறைந்தது தலா 5 ஓவர்கள் பேட்டிங் செய்வது அவசியமாகும். ஆனால் நாக்கவுட் சுற்றின் போது போட்டியின் முடிவை தீர்மானிக்க குறைந்தது இரண்டு அணிகளும் தலா 10 ஓவர்கள் ஆட வேண்டும். நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் உலகக் கோப்பை இறுதி போட்டியில்  ரிசர்வ் தினமாக நவம்பர் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ரிசர்வ் நாளிலும் மழை குறுக்கிட்டு இறுதிப் போட்டி கைவிடப்படும் பட்சத்தில், போட்டி டிரா செய்யப்படும். பின்னர் ஐசிசி விதிமுறைப்படி இரு அணிகளுமே வெற்றியாளர்கள் என அறிவிக்கப்படுவார்கள்..

2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள்  மோதியது. அப்போது மழை குறுக்கிட்ட பின் அடுத்த நாள் ரிசர்வ் நாளாக போட்டி நடைபெற்றது. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |