Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அரையிறுதி 2….. “இந்தியா vs இங்கிலாந்து மோதல்”….. இந்திய வீரர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!!

அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி வீரர்கள் பற்றி பாப்போம்..

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, அடிலெய்டு ஓவலில் இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அவர்களின் கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக  சிறப்பான வெற்றிக்குப் பிறகு மென் இன் ப்ளூ அவர்களின் குழுவில் முதலிடம் பிடித்தது. இந்திய அணியில் கே.எல் ராகுல், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர்அற்புதமான ஃபார்மில் இருப்பதால் அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோத ஆயத்தமாக இருக்கிறது. இன்று (நவம்பர் 10ஆம் தேதி) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரு வலுவான அணிகளுக்கு இடையேயான போட்டி அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. இந்திய அணி வீரர்கள் பற்றி பாப்போம்..

தொடக்க ஆட்டக்காரர்கள்: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (கே)

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இருந்து தொடக்க ஆட்டம் இந்திய அணிக்கு கவலையளிக்கும் பகுதியாக உள்ளது. ஆனால், 2022 டி20 உலகக்கோப்பை சூப்பர் 12ல் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான முந்தைய 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக அரை சதங்களைப் பதிவு செய்த கே.எல்.ராகுல் பார்முக்கு வந்திருப்பது அணிக்கு பலம் சேர்க்கிறது. ராகுல் அதே அதிரடியை அரையிறுதியில் தொடரவேண்டும் என்பதே ரசிகர்கள் விருப்பம்..

கே.எல்.ராகுல் தனது ஃபார்மை மீண்டும் பெற்றுள்ள நிலையில், அவரது தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோஹித் ஷர்மா இந்த ஆண்டு உலகக் கோப்பையில் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும். ரோஹித் ஷர்மா இதுவரை மந்தமாகவே காணப்படுகிறார்.. நெதர்லாந்துக்கு எதிராக மட்டும் அரைசதம் அடித்தார், மற்றபடி 4 போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை.. ஆனால் துணிச்சலான ரோஹித் சர்மா  அரையிறுதியில் பெரிய ஸ்கோரை விளாசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக செயல்படுபவர்.

மிடில் ஆர்டர்: விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (வி.கீ )

போட்டியின் முன்னணி ரன் எடுத்த வீரர் விராட் கோலி, எம்சிஜி மைதானத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு அற்புதமான அதிரடி அரைசதம் அடித்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தவர்..  அன்றிலிருந்து அவர் ஜாலியாக ரன்களை குவித்து வருகிறார். அடிலெய்டு ஓவல் மைதானத்தில் அவர் செய்த சாதனை ஈடு இணையற்றது, மேலும் ‘கிங் கோலியின் மற்றொரு மாஸ்டர் கிளாஸை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

உலகக் கோப்பையின் இந்த ஆண்டு பதிப்பில் கோலி இந்தியாவுக்கான கொண்டாட்டங்களைத் தொடங்கினார், அதே சமயம் அவரது மிடில்-ஆர்டர் பேட்டிங் பார்ட்னர் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் முதுகெலும்பு என்றே சொல்லலாம்.. ஆம், புதுமையான பேட்டர் அறிமுகமானதில் இருந்து இந்த டி20 வடிவத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டக்கூடிய பேட்டராக இருக்கிறார். மற்றும் சூப்பர் 12 கட்டத்தில் சில  அற்புதமான ஆட்டங்களை ஆடி இருக்கிறார். ஐசிசி டி20 தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்து அசத்துகிறார். இன்றைய போட்டியில் இவரது ஆட்டம் அனைவரையும் கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டர் தினேஷ் கார்த்திக் இந்த டி20 தொடரில் இதுவரையில் ஜொலிக்கவில்லை கொடுக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக முதல் சூப்பர் 12 போட்டியில் பினிஷிங் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை கோட்டை விட்டு அவுட் ஆனார்.. ஆனாலும் அனுபவமான கார்த்திக் சிறந்த தரமான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. ஆனாலும் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக இன்றைய போட்டியில் பண்ட் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் பந்த் 3 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பண்ட் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இதுவரையில் ரன்கள் சேர்த்தது கிடையாது. இருப்பினும் அதிரடி வீரரான பண்ட் ஒருவேளை இன்று வாய்ப்பு கிடைத்து ஜொலித்தார் என்றால் நல்லது தான்..

ஆல்ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்தியாவின் அட்டகாசமான ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் தொடக்க ஆட்டத்தில் கோலியுடன் இணைந்து மதிப்புமிக்க ரன்களை அடித்தார், வழக்கமாக அதிரடி காட்டக்கூடிய பாண்டியா அன்றைய போட்டியில் சூழலுக்கு ஏற்ப ஆடினார்.. ஆனால் அதன்பிறகு நடந்த ஆட்டங்களில் அவர் பலவீனமாக இருந்து வருகிறார். இருப்பினும் அதிரடி வீரர் பாண்டியா எப்போது வேண்டுமானாலும் அதிரடி சரவெடியை தொடரலாம்.

ஹர்திக்கைப் போலவே, அக்சர் படேலும் தற்போதைய போட்டியில் தனது வழக்கமான உயர்ந்த தரத்தை அடைய முடியவில்லை. உயரமான இடது கை சுழற்பந்து வீச்சாளர் சூப்பர் 12 கட்டத்தில் 4 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடிந்தது. இருப்பினும் அணிக்கு விக்கெட் தேவை என்ற போது விக்கெட் எடுக்கக்கூடிய பவுலர் அக்சர். பேட்டிங்கிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர். இன்றைய போட்டியில் அசத்த வேண்டும் என்பதே ரசிகர்கள் விருப்பம்..

மேலும் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் அணிக்கு பெரிய சந்தர்ப்பங்களுக்கு நாயகனாக இருந்து வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான அவரது மேட்ச் வின்னிங் ரன்களாக இருந்தாலும் சரி அல்லது பங்களாதேஷுக்கு எதிரான போர்க்குணமிக்க கேமியோவாக (6 பந்துகளில் 13 ரன்கள்) இருந்தாலும் சரி, தீர்க்கமான தருணங்களில் மென் இன் ப்ளூ அணிக்காக அஷ்வின் அட்டகாசமாக செயல்படுகிறார்.

பந்துவீச்சாளர்கள்: புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

மூத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படும் வகையில் மென் இன் ப்ளூ அணிக்கான பந்துவீச்சு தாக்குதலை முன்னெடுத்து வருகிறார். அவர் கையில் பந்தை ஸ்விங் செய்து  பவர்பிளேயில் விக்கெட் எடுக்கும் பட்சத்தில் இங்கிலாந்தை கட்டுப்படுத்தலாம்..

அதேபோல் அகால கோவிட்-19 தொற்றைத் தொடர்ந்து உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு முகமது ஷமி இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணிக்கு, குறிப்பாக இன்னிங்ஸின் நடுத்தர ஓவர்களில் முக்கியமான ஓவர்களை வீசுகிறார். இதுவரையில் நன்றாகவே செயல்பட்டுள்ளார்.

மேலும் இளம் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் வெற்றிடத்தை நிரப்பி, தனது ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். 23 வயதான அவர் போட்டியின் சூப்பர் 12 கட்டத்தில் 10 விக்கெட்டை எடுத்து இந்திய அணியின் நம்பிக்கையாக இருக்கிறார். ஜோஸ் பட்லரின் இங்கிலாந்துக்கு எதிராக புவனேஷ்வருடன் சேர்ந்து புதிய பந்தில் அவரது பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக இருக்கும். இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இறுதிப்போட்டிக்கு செல்லலாம் ..

இந்தியா கணிக்கப்பட்ட XI:

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

இங்கிலாந்து கணிக்கப்பட்ட XI:

அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் (c & wk), டேவிட் மாலன்/பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் குர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்/கிறிஸ் ஜோர்டான்

Categories

Tech |