Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஆண்ட்ரே ரசலுக்கு இடமில்லை…. அப்போ யாரு தான் இருக்கா….. 15 பேர் கொண்ட அணியை அறிவித்த விண்டீஸ்..!!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும்  2022 டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான வீரர்களை ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளும் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை வெஸ்ட் இண்டீஸ் அணியும் அறிவித்துள்ளது.

இதில் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் துணை கேப்டனாக ரோவ்மன் பவல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடக்க வீரர் எவின் லூயிஸ் இடம்பெற்றுள்ளார். ஆனால் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் ஆகியோரை 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கவில்லை. இடது கை லூயிஸ் கடைசியாக 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த டி20 உலகக் கோப்பையில் அணிக்காக விளையாடினார்,

அதே நேரத்தில் மூத்த வீரர்களான ரசல் மற்றும் சுனில் நரைன் சமீபத்திய மாதங்களில் தேர்வாளர்களால் கவனிக்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆல்-ரவுண்டர்களான யானிக் கரியா மற்றும் ரேமன் ரைஃபர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் ஆல்ரவுண்டர் ஃபேபியன் ஆலனுக்கும் இடம் கிடைக்கவில்லை. 

பி பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 12 சுற்றில் இடம்பிடிக்காததால் அக்டோபர் 17ஆம் தேதி ஸ்காட்லாந்து அணியையும், அக்டோபர் 19ஆம் தேதி ஜிம்பாப்வே அணியையும், அக்டோபர் 21ஆம் தேதி அயர்லாந்து அணியையும் எதிர்கொள்ள இருக்கிறது. பி பிரிவின் முதல் 2 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழையும்.. ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியுடன் 2 டி20 போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி:

நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மேன் பவல், யானிக் கரியா, ஜான்சன் சார்லஸ், ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரோன் ஹெட் மயர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ், ஓபேட் மெக் மேயர்ஸ், ரேமன் ரெய்ஃபர், ஒடியன் ஸ்மித்

Categories

Tech |