Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை.!!

ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். இந்நிலையில் இன்று குரூப் 1 பிரிவிலுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் மோதியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குர்பாஸ் 28 ரன்களும், உஸ்மான் கானி 27 ரன்களும், இப்ராகிம் சத்ரான் 22 ரன்களும் நஜிபுல்லா சத்ரான் 18 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியில் வனிந்து ஹசராங்கா 3 விக்கெட்டுகளும், லஹிரு குமாரா 2 விக்கெட்டுகளும், ரஜிதா மற்றும் தனஞ்செய டி சில்வா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்..

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் துவக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும் களமிறங்கினர். இதில் நிசாங்கா 10 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து தனஞ்செயா டி சில்வாவுடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர, இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர் அதன் பின் மெண்டிஸ் 25 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து தனஞ்செயா டி சில்வா மற்றும் அசலங்கா இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். தொடர்ந்து அசலங்கா 19 ரன்னில் அவுட் ஆனார்..

இலங்கை அணி 13.3 ஓவரில் 100/3 என வலுவாக இருந்தது.  அதன் பின் டி செல்வா அரைசதம் கடந்தார். பின்வந்த ராஜபக்சே அவர் பங்கிற்கு 18 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இதையடுத்து 18ஆவது ஓவரில் தனஞ்செயா டி சில்வா பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.. இறுதியில் இலங்கை அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தனஞ்செயா டி சில்வா42 பந்துகளில் (6 பவுண்டரி, 2 சிக்ஸர்) 66 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் அணியில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி புள்ளிபட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 

Categories

Tech |