அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12ல் இன்று இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மெல்போர்ன் ஸ்டேடியத்தில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பாட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக பால் ஸ்டர்லிங், பால்பிர்னி இருவரும் களமிறங்கினர். ஒரு ஓவர் முடிந்த நிலையில் தொடக்கத்திலேயே மழை குறுக்கிட்டது. அதன்பின் மீண்டும் சிறிது நேரம் கழித்து போட்டி தொடங்கியது.
இதில் துவக்க வீரர் ஸ்டர்லிங் அதிரடியாக 14(8) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன்பின் பால்பிர்னியுடன் டக்கர் கைகோர்த்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன்பின் 12ஆவது ஓவரின் கடைசி பந்தில் 27 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த டக்கர் துரதிஷ்டவசமாக ரன்னவுட்டானார். 12 ஓவரில் 103/ 2 என ஓரளவிற்கு வலுவாகவே இருந்தது நெதர்லாந்து அணி.
அதன்பின் வந்த ஹாரி டெக்டர் 0 ரன்னில் அவுட் ஆக, சிறப்பாக ஆடி அரை சதம் அடித்த துவக்க வீரர் பால் பிர்னியும் 47 பந்துகளில் (5 பவுண்டரி, 2 சிக்ஸர்) 62 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதனைத்தொடர்ந்து வந்த கேம்பர் 18, ஜார்ஜ் டோக்ரெல் 0, மார்க் அடேர் 4, மெக்கர்த்தி 3, ஃபியோன் ஹெண்ட் 1, லிட்டில் 0 என சொற்ப ரன்களில் அனைவரும் அடுத்தடுத்து அவுட் ஆனதால் பெரிய ஸ்கோரை அந்த அணியால் எட்ட முடியவில்லை. அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
கடைசி நேரத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் 15 – 20 ரன்கள் குறைவாகவே எடுத்துள்ளது அயர்லாந்து. இங்கிலாந்து அணியில் மார்க் வுட் மற்றும் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், சாம் கரன் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். தற்போது இங்கிலாந்து அணி களமிறங்கி 6 ஓவரில் 37/3 என ஆடி வருகிறது.
Outstanding bowling comeback helps England restrict Ireland to 157 👊
Will Ireland defend the total?#IREvENG | 📝: https://t.co/Q7PLAsLUOL pic.twitter.com/ay4M53QBmy
— ICC (@ICC) October 26, 2022