Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இந்திய அணிக்கு 2ஆவது வெற்றி…. 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.!!

சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்து அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி..

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்திய நேரப்படி இன்று மதியம் 12: 30 மணிக்கு மேல் இப்போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கி ஆட்டத்தை தொடங்கினார்.

இதில் மீகெரென் வீசிய 3ஆவது ஓவரில் கே எல் ராகுல் 9 ரன்னில் இருந்தபோது எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். இதையடுத்து கோலியுடன் ரோகித் சர்மா கை கோர்த்தார். இருவரும் பொறுமையாக தொடங்கிய நிலையில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.அதன்பின் ரோஹித் சர்மா 39 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 53 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 12 ஓவரில் 84/2 என இருந்தது. இதையடுத்து சூரியகுமார் யாதவும், விராட் கோலியும் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார். விராட் கோலி சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தார்.

தொடர்ந்து கடைசி ஓவரில் இந்திய அணி 17 ரன்கள் எடுத்தது. அதில் கடைசி பந்தை சூர்யகுமார் சிக்ஸர் அடித்து தனது அரைசதத்தை பதிவு செய்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. விராட் கோலி 44 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 62 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 51 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்..

இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் நெதர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக டிம் பிரிங்கிள் 20 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். மேலும் முகமது ஷமி ஒரு விக்கெட்  எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Categories

Tech |