Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இந்தியா vs பாகிஸ்தான்….. இன்று அனல்பறக்கும் சூப்பர் 12 போட்டி… வெல்வது யார்?

இன்றைய சூப்பர் 12 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன..

ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்தது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இதனால் சூப்பர் 12 சுற்றிலுள்ள குரூப் 1 பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து,  இலங்கை ஆகிய 6 அணிகள் இடம் பிடித்துள்ளது. குரூப் 2 பிரிவில் வங்கதேசம், இந்தியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய 6 அணிகள் இடம்பெற்றுள்ளன.. ஒட்டுமொத்தமாக 12 அணிகள் சூப்பர் 12ல் இருக்கின்றன.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்றிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மெல்போர்னில் இன்று  (அக்டோபர் 23 ஆம் தேதி) ஐசிசி டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இந்திய நேரப்படி போட்டி மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக மற்றொரு சூப்பர் 12 போட்டியில் இலங்கை – அயர்லாந்து அணிகள் இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு மோதுகிறது.

2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் ஆசியக்கோப்பை தொடரில் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 1 முறையும், இந்தியா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆசியக் கோப்பை மற்றும் கடந்த டி20 உலகக் கோப்பை தோல்விக்கு இந்தியா பழிவாங்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.. இந்த போட்டி அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.. அதேசமயம் மெல்போனில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. ஒருவேளை மழை குறுக்கிட்டால் குறைந்த ஓவராக நடத்தப்படலாம்.. மழை அதிகமாக பெய்யும் பட்சத்தில் ஐசிசி என்ன மாதிரியான முடிவெடுக்கும் என்று தெரியவில்லை..

இரு அணிகளின் கேப்டன்களும் இந்த மோதலுக்கு முன்னதாக தங்கள் அணி தயாராக இருப்பதாக தெரிவித்தனர். பாபர் அசாம் மற்றும் ரோஹித் சர்மா போட்டியின் பதற்றம் பற்றி அதிகம் பேசவில்லை.

Categories

Tech |