கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது ஆல் டைம் டி20 உலகக் கோப்பை லெவன் என பெயரிட்டுள்ளார்.
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள தகுதி சுற்று போட்டிகள் முடிவடையும் நிலையில், அதிலிருந்து முதல் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.. இதனையடுத்து பிரதான சூப்பர் 12 சுற்று நாளை (22ஆம் தேதி) காலை 9:30 மணிக்கு நியூசிலாந்து – ஆஸ்திரேலியா மோதலுடன் தொடங்குகிறது.
அதன்பின் அடுத்த நாளான 22 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து பலரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். அதே நேரத்தில் அனைத்து நாடுகளின் வீரர்களையும் ஒருங்கிணைந்து உலகக் கோப்பை 11 அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது ஆல் டைம் டி20 உலகக் கோப்பை லெவன் என பெயரிட்டுள்ளார். அதில், விராட் கோலி ஒரே இந்தியராகவும், ஷாஹித் அப்ரிடி மற்றும் உமர் குல் 2 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களாகவும் அவரது XI இல் இடம்பெற்றுள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் ஜோஸ் பட்லரை அவர் அறிவித்தார். மற்ற வீரர்களில் கெவின் பீட்டர்சன், மைக்கேல் ஹஸ்ஸி, ஷேன் வாட்சன், லசித் மலிங்கா, டிரென்ட் போல்ட் மற்றும் சாமுவேல் பத்ரி ஆகியோர் அடங்குவர்.
போக்லேவின் ஆல்டைம் 11 அணியில் ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட இந்திய நட்சத்திர பேட்டர்கள் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது..