டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.
2022 டி20 உலகக் கோப்பையில் தோற்கடிக்கப்படாத ஒரே அணியான தென்னாப்பிரிக்கா, இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு (நவம்பர் 3ஆம் தேதி) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 36வது போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. புரோட்டீஸ் 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், தனது முதல் 2 ஆட்டங்களில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வேயிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான், நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. போட்டியில் ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் உள்ளது. புரோட்டீஸைப் பற்றி பேசுகையில், அவர்களின் கேப்டன் டெம்பா பவுமாவைத் தவிர, மற்ற அனைத்து பேட்டர்களும் நல்ல பார்மில் உள்ளனர், அந்த அணியில் குயின்டன் டி காக், ரிலீ ரோசோவ், ஐடன் மார்க்ரம் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். மேலும் பந்துவீச்சில் ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, லுங்கி என்கிடி ஆகியோர் அசத்துகின்றனர்.. பவுமாவின் ஃபார்ம் அணிக்கு கவலையளிக்கிறது, ஏனெனில் அவர் மூன்று போட்டிகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே இந்த போட்டியில் அவர் ரன்களை குவிப்பது அவசியம்..
அதேபோல இதுவரை 3 போட்டிகளில் 8 ரன்களை மட்டுமே குவித்துள்ள எதிரணி வீரர் பாபர் அசாம் ரன்களை குவிக்க முடியாமல் அழுத்தத்தில் உள்ளார்.. தென்னாப்பிரிக்கா இதில் வெற்றி பெற்றால் நெதர்லாந்துடனான அவர்களின் இறுதி மோதலுக்கு முன்பே அரையிறுதிக்கு சென்று விடுவார்கள். அதேசமயம் பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா அணியையும், வங்காளதேசத்தையும் அதிக ரன்ரேட்டில் தோற்கடிக்க வேண்டும், மேலும் தென்னாப்பிரிக்கா கடைசி போட்டியில் நெதர்லாந்துடன் தோற்க வேண்டும் அப்படி நடந்தால் பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு.. ஆனால் நடப்பதற்கான வாய்ப்பு குறைவு..
நேருக்கு நேர்: பாக்கிஸ்தாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 21 டி20 போட்டிகளில் ஒன்றையொன்று சந்தித்துள்ளன, தென்னாப்பிரிக்காவின் 10 வெற்றிகளுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் 11 வெற்றிகளுடன் புரோட்டீஸை ஓரங்கட்டியுள்ளது. டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை சந்தித்த மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் தோற்கடித்துள்ளது.
கணிக்கப்பட்ட பிளேயிங் XI :
பாகிஸ்தான் : முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா.
தென்னாப்பிரிக்கா : குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கேப்டன்), ரிலீ ரோசோவ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, லுங்கி என்கிடி