இன்றைய பயிற்சி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.
ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது.
இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் 23 ஆம் தேதி பரம் எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையே சூப்பர் 12 சுற்றில் இடம்பிடித்திருக்கும் இந்தியா உட்பட அனைத்து அணிகளும் பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது..
இந்திய அணி 4 பயிற்சி போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில், மேற்கு ஆஸ்திரேலியா அணியுடன் 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடி 1ல் வென்றது. இந்நிலையில் இன்றைய பயிற்சி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.
இந்திய நேரப்படி இன்று காலை 9:30 மணியளவில் நடைபெறும் இந்த போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடாத விராட் கோலி, முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இந்திய அணி தனது அடுத்த பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணியை அக்டோபர் 19ஆம் தேதி எதிர்கொள்கிறது.