7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன் அடித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 57 அடிக்க, ரிஷப் பண்ட் 39ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3விக்கெட்டும், ஹசன் அலி 2விக்கெட்டும் எடுத்தனர்.
152 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஜோடிகளான முஹம்மத் ரிஸ்வான் – பாபர் அசாம் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர். தொடக்க ஜோடியை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறிய நிலையில் 10ஓவர் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 71ரன் எடுத்து அசத்தியது.
சிறப்பாக ஆடிய பாபர் அசாம் 40 பந்தில் 51 ரன் எடுத்து கலக்கினார். 12.4 பந்தில் 100 ரன்னை கடந்த பாகிஸ்தான் அணி 13ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 101 ரன் எடுத்தது.41 பந்தை சந்தித்த முஹம்மத் ரிஸ்வான் 53 எடுத்து அவரும் அரைசதம் அடித்தார். தொடக்க ஜோடிகளான இருவரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 15 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 121ரன் எடுத்து. முஹம்மத் ரிஸ்வான்* 56 – பாபர் அசாம்* 62 இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் வெற்றி பெற இன்னும் வெறும் 30பந்தில் 31 ரன் தேவை