டி20 உலகக்கோப்பையில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது ஆஸ்திரேலியா.
8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய குசால் மெண்டிஸ் 5 ரன்னில் ஆட்டம் இழந்த போதிலும் மற்றொரு தொடக்க வீரர் நிசாங்கா – தனஞ்செய டி சில்வா இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர்.
இதையடுத்து பொறுமையாக ஆடி வந்த நிசாங்கா 40(45) ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து தனஞ்செய டி சில்வா செல்வா 26 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன் பின் வந்த ராஜபக்சே 7, தசுன் ஷானகா 3, வனிந்து ஹசரங்கா 1 என சொற்ப ஆட்டமிழந்த போதிலும் அசலங்கா 25 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். மேலும் கருணாரத்னே 14 ரன்களில் அவுட் ஆகாமல் இருந்தார். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்கினர்.. இதில் டேவிட் வார்னர் 11 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து அந்த மிட்செல் மார்ஷ் 18 ரன்னில் அவுட் ஆனார். அதனைத்தொடர்ந்து பிஞ்சுடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக தொடங்கிய நிலையில், 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த நிலையில் 13 வது ஓவரில் மேக்ஸ்வெல் ஆட்டம் இழந்தார்.
அதன்பின் பிஞ்சுடன் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். இதில் ஒருபுறம் பிஞ்ச் பொறுமையாக தட்டி தட்டி ஆடிக் கொண்டிருக்க, ஸ்டாய்னிஸ் வந்த வேகத்தில் புயலாக மாறினார். வனிந்து ஹசரங்கா வீசிய 15-வது ஓவரில் 2 சிக்ஸர் ஒரு பவுண்டரி பறக்க விட்ட ஸ்டானிஷ், தீக்ஷனா வீசிய 16வது ஓவரையும் விட்டு வைக்கவில்லை.. அந்த ஓவரில் மூன்று சிக்ஸர் தொடர்ச்சியாக பறக்க விட்டார். இதையடுத்து லஹிரு குமாரா வீசிய 17ஆவது ஓவரில் அரை சதம் கடந்தார். அவர் இந்த டி20 உலக கோப்பையில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அந்த ஓவரிலேயே ஆஸி அணி வென்றது.. இறுதியில் ஆஸ்திரேலியா அணி 16.3 ஓவரில் 3 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்டாய்னிஸ் 18 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்ஸர் உடன் அவுட்டாகாமல் 59* ரன்கள் எடுத்திருந்தார். மேலும் ஆரோன் பிஞ்ச் 31(42) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகாமல் இருந்தார். இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது ஆஸ்திரேலியா.
A sensational fifty from Marcus Stoinis powers Australia to a spectacular win 👊🏻#AUSvSL | #T20WorldCup | 📝: https://t.co/cwIkvUCvbM pic.twitter.com/HYN0mSCUOx
— ICC (@ICC) October 25, 2022