இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சூப்பர் 12 போட்டிகள் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.. இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும்.
இந்நிலையில் இன்று குரூப் 1 பிரிவிலுள்ள நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 1:30 மணிக்கு மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். அதன்படி அந்த அணி பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறது..
இலங்கை லெவன் :
பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ், டிஎம் டி சில்வா, அசலங்கா, பானுக ராஜபக்ஷ, தசுன்ஷானகா, வனிந்து ஹசரங்கா, கருணாரத்னே, மஹீஸ் தீக்ஷன, லஹிரு குமாரா, ரஜிதா .
நியூசிலாந்து லெவன் :
டெவான் கான்வே, ஆலன், கேன் வில்லியம்சன், பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட்.
A toss win at the @scg and Kane Williamson opts to bat first against @OfficialSLC in Sydney. @dazmitchell47 in the XI for Mark Chapman. Follow play LIVE in NZ with @skysportnz and @SENZ_Radio. LIVE scoring | https://t.co/rqeeIwqRKg #T20WorldCup pic.twitter.com/B4NZWj5CON
— BLACKCAPS (@BLACKCAPS) October 29, 2022