Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தகுதிச்சுற்றில் 2ஆவது வெற்றி…. நமீபியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நெதர்லாந்து..!!

தகுதிச்சுற்று போட்டியில் நமீபியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து அணி..

ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் 5வது போட்டியில் இன்று (அக்.,18) ஜீலாங்கில் நமீபியா – நெதர்லாந்து அணிகள் மோதி வருகிறது.. இரு அணிகளும் முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றன. ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கையை நமீபியா தோற்கடித்தது. அதேபோல நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியைத் தோற்கடித்தது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி நமீபியா அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய மைக்கேல் வான் லிங்கன் 20 ரன்களிலும், திவான் லா காக் டக் அவுட் ஆகியும் வெளியேறினர். அதன்பின் ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன் 0, ஸ்டீபன் பார்ட் 19 என அவுட் ஆனதால்  நமீபியா அணி தடுமாறி 11.2 ஓவரில் 63/4 ரன்கள் மட்டுமே எடுத்து.

இதையடுத்து ஜான் ஃப்ரைலின்க் மற்றும் கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடினர். கடைசியில் 18-வது ஓவரில் ஜான் ஃப்ரைலின்க் 43 (48) ரன்களில் அவுட் ஆனார்.. அதனைத் தொடர்ந்து எராஸ்மஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, கடைசியில் டேவிட் வைஸ் 11, ஜேஜே ஸ்மிட் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து நமீபியா அணி 121 ரன்கள் குவித்துள்ளது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக பாஸ் டி லீட் 2 விக்கெட்டுகளும், டிம் பிரிங்கிள், கொலின் அக்கர்மேன், பால் வான் மீகெரென் மற்றும் ரோலோஃப் வான் டெர் மெர்வே ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து நெதர்லாந்து அணியின் துவக்க வீரர்களாக மேக்ஸ் ஓடோவ்ட் மற்றும் விக்ரம்ஜித் சிங் இருவரும் களமிறங்கினர். இந்த தொடக்க ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இலக்கு குறைவு என்பதால் பவர்பிளேவுக்குள் 2 – 3 விக்கெட்டுகளை எடுத்தாக வேண்டிய நிலையில், நமீபியாவால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. அதன்பின் 9ஆவது ஓவரில் தான் விக்ரம் அஜித் சிங் 31 பந்துகளில் (3 பவுண்டரி, 2 சிக்ஸர்) 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து பாஸ் டி லீட் மற்றும் மேக்ஸ் ஓடோவ்ட் இருவரும் சேர்ந்து இலக்கை விரட்டினர். அதன்பின் 14 வது ஓவரில் தொடக்க வீரர் மேக்ஸ் ஓடோவ்ட் (35) ரன் அவுட் ஆனார்.  அப்போது நெதர்லாந்து அணி 13.5 ஓவரில் 92 /2 என இருந்தது அதன் பின் பாஸ் டி லீட் – டாம் கூப்பர் இருவரும் இலக்கை துரத்திய போது, ஜேஜே ஸ்மிட் வீசிய 16ஆவது ஓவரில் கூப்பர் 6 ரன்னில் அவுட் ஆக, அதன்பின் வந்த கொலின் அக்கர்மேன் அதே ஓவரில் டக் அவுட் ஆனார்.

தொடர்ந்து 17ஆவது ஓவரில் ஸ்காட் எட்வர்ட்ஸ் 1 ரன்னில் வெளியேற, தட்டி தட்டி ஆடிய நெதர்லாந்து அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது டேவிட் வைஸ் வீசிய முதல் பந்தில் பவுண்டரி அடித்து பாஸ் டி லீட் பிரஷரை குறைத்தார். அடுத்தப்பந்து டாட் ஆக, 3ஆவது பந்தில் அடித்து விட்டு 2 ரன்கள் ஓடி வெற்றிபெற வைத்தார்.

இதனால் நெதர்லாந்து அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து வென்றது. பாஸ் டி லீட்  30 ரன்களுடனும், டிம் பிரிங்கிள் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.. நமீபியா அணியில் அதிகபட்சமாக ஜேஜே ஸ்மிட் 2 விக்கெட்டுக்களையும், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் மற்றும் ஜான் ஃப்ரைலின்க் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதன்மூலம் நெதர்லாந்து அணி தகுதிச்சுற்றில் 2ஆவது வெற்றியை பெற்றுள்ளது.

Categories

Tech |