Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தொடர் மழை…. ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து போட்டி ரத்து….!!

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான்-  அயர்லாந்து அணிகள் இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுபோட்டிகள் ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மழை காரணமாக சில போட்டிகள் கைவிடப்பட்டும் வருகின்றது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவிலுள்ள ஆப்கானிஸ்தான்-  அயர்லாந்து அணிகள் இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. மெல்போர்ன் மைதானத்தில் இன்று காலை 8:30 மணிக்கு போட்டி தொடங்குவதாக இருந்தது.

ஆனால் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது இதனால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. முன்னதாக ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போதும் மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. தற்போது இந்த போட்டியும் மழையால் கைவிடப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தான் அணி பின்னடைவை சந்தித்துள்ளது.

குரூப் 1 பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் 3 போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியடைந்து, இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதால் 2 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் அயர்லாந்து அணி 3 போட்டிகளில் ஒரு போட்டி வெற்றி, ஒரு போட்டி தோல்வி, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டதால் 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

அடுத்ததாக இந்திய நேரப்படி 1: 30 மணிக்கு இதே மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளது. அப்போதும் மழை தொடர்ந்து பெய்தால் போட்டி நிறுத்தப்பட வாய்ப்புள்ளது..

Categories

Tech |